உசிலம்பட்டி பேருந்து நிலையப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்: எம்.எல்.ஏ.

உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிகளை, விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்

Update: 2024-06-14 09:00 GMT

பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ 

மந்தமாக நடைபெறும் உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிகளை, விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்கம் மற்றும் புதிய பேருந்து நிலைய கட்டமைப்பு பணிகள் 8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.

கடந்த ஓர் ஆண்டுகளாக மந்தமான நிலையில், நடைபெற்று வரும் இந்த பேருந்து நிலைய விரிவாக்கம் மற்றும் புதிய பேருந்து நிலைய கட்டமைப்பு பணிகளை இன்று உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

உசிலம்பட்டி நகராட்சி பொறியாளர் பட்டுராஜனிடம் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் குறித்து கேட்டறிந்த எம்.எல்.ஏ. அய்யப்பன், சுமார் 8 கோடி நிதியில் கட்டப்பட்டு வரும் இந்த பேருந்து நிலைய பணிகள் கால தாமதமாக நடைபெற்று வருவதாகவும், ஊராட்சி நிர்வாகத்திடமிருந்து நகராட்சிக்கு வழங்கப்பட்ட 8 ஏக்கர் நிலப்பரப்பில் முதற்கட்டமாக ஒரு ஏக்கரை விரைந்து கையகப்படுத்தி பேருந்து நிலைய விரிவாக்க பணிகளை துரிதப்படுத்த வேண்டும், எனவும், மேலும் தேவையான 9 கோடி நிதியை அரசிடம் பெற்று விரைந்து கட்டுமான பணிகளை தாமதமின்றி முடித்து 6 மாத காலத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தார்.

Tags:    

Similar News