சோழவந்தான் அருகே கோயில் வேப்பமரத்தில் திடீரென பால் வடிந்ததால் பரபரப்பு

வேப்பமரத்தில் திடீரென பால் வடிந்ததை அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தபடி சென்றனர்

Update: 2023-11-04 15:45 GMT

சோழவந்தான் அருகே கோயில் வேப்ப மரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு

சோழவந்தான்அருகே விக்கிரமங்கலம் காமாட்சி அம்மன் கோவில் வேப்பமரத்தில் திடீரென பால் வடிந்த தால்  பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே விக்ரமங்கலம் ஐந்து பேர் ஆண்டித்தேவர் வகையறா மற்றும் நல்லுக்குட்டி வகையறாவுக்கு பாத்தியப்பட்டகாமாட்சி அம்மன் கோவில் பிரகாரத்தில் உள்ள வேப்ப மரத்தில் திடீரென பால் வடிந்ததால் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்தனர். இதனைத் தொடர்ந்து, வேப்ப மரத்திற்கு மஞ்சள் துணி சுற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த கோவிலில் கடந்த பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து, மண்டலாபிஷேகமும் நடைபெற்றது .இதன் காரணமாக அம்மனின் சக்தியாக கோவில் பிரகாரத்தில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததாகவும் ஆகையால், கோவிலில் தொடர்ந்து திருவிழாக்கள் நடத்த வேண்டும் எனவும், இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கோவில் பிராகாரத்தில் உள்ள வேப்பமரத்தில் திடீரென பால் வடிந்ததை அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தபடி சென்றனர்.அதிலும் ,சிலர் நேர்த்திக்கடனாக காணிக்கை செலுத்தி விட்டு சென்றனர்.

Tags:    

Similar News