தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது; 32 கிலோ கஞ்சா பறிமுதல்
பனைபட்டி அருகே தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;
தோட்டத்தில் பதுக்கிவைத்திருந்த கஞ்சா.
மதுரை மாவட்டம், பனைபட்டி அருகே கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கே கஞ்சா பதுக்கி வைத்திருந்த வீரமணி என்பவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து தோட்டத்தில் இருந்த சுமார் 32 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் வீரமணியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.