மழையில் நனையும் நெல்மணிகள் அதிகாரிகள் மூலம் கொள்முதல்: அமைச்சர் மூர்த்தி
செக்கானூரணி வேளாண் விரிவாக்க மையத்தில், துணைக் கட்டிடத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்;
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி செக்கானூரணியில் துணை வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை, வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனையும் நெல்மணிகள் அதிகாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்படும் என்றார் வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி.
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி செக்கானூரணி பேருந்து நிலையம் அருகே துணை வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை, வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசியபோது: நெல் கொள்முதல் நிலையங்களில் மழை நீரால் நனையும் மற்றும் நனைந்துள்ள நெல்மணிகளை விவசாயிகளின் தகவல் அடிப்படையில், அதிகாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்தார். இதில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மற்றும் மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன், செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் சுதாகரன் ,அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.