மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் பத்ரகாளியம்மன் ஆலய விழா

விக்கிரமங்கலம் அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழா பால்குடம் தீச்சட்டி எடுத்து வழிபாடு

Update: 2022-05-21 11:30 GMT

விக்கிரமங்கலம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழா பால்குடம் தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் கிராமத்தில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக தீச்சட்டி பால்குடம் எடுக்கும் வைபவம் இன்று நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

தொடர்ந்து பத்திரகாளி அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் அர்ச்சனை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை வ ட்ட பொட்டு சரவண நாடார் வகையறாக்கள், நல்லி வீரம் பட்டி யார் கிடா வெட்டும் முறையாளர்கள் ராஜேந்திரன் வையாபுரிசௌந்திரபாண்டி. மனோகரன்ஜவஹர் மற்றும் விக்கிரமங்கலம் இந்து நாடார் உறவின் முறை பரிபாலன சங்கத்தினர் செய்திருந்தனர். இதில் செல்லம்பட்டி ஒன்றிய சேர்மன் கவிதாராஜா, செல்லம்பட்டி ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜா, விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கலியுக நாதன் ஊராட்சி செயலாளர் பால்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News