மதுரை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு மையங்களில் ஆட்சியர் ஆய்வு
மாணவர்களும், ஆசிரியர்களும் தேர்வு அறைகளில் செல்போன் எடுத்துவர அனுமதி கிடையாது.;
மதுரை மாவட்டத்தில் தொடங்கிய பிளஸ்2 அரசு பொதுத்தேர்வு மையங்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 13 ஆம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வினை 8.5 லட்சம் மாணவர்கள் எழுத இருக்கின்றனர்.
ஆய்வு செய்த பின்னர் ஆட்சியர் கூறியதாவது: மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை மேல்நிலை பிளல்2 பொதுத்தேர்வில் 323 பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் 18734 பேரும், மாணவியர்கள் 18723 பேரும் ஆக மொத்தம் 37457 பேரும் 116 தேர்வு மையங்களில் தேர்வெழுத உள்ளனர்.. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் இருந்து வினாத்தாள்கள் 30 வழித்தடங்கள் வழியாக ஆயுதம் தாங்கியகாவலர்கள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இப்பொதுத் தேர்வில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் அறைக் கண்காணிப்பாளர்கள், நிலையான படை உறுப்பினர்கள் என 3400 தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் தேர்வுப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
8 ஆய்வு அலுவலர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும்படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு இத்தேர்வினை கண்காணிக்க உள்ளனர்.இவ்வாண்டு 352 மாற்றுத்திறனாளிகள் மாணவ, மாணவியர்களில், கண்பார்வை குறையுள்ள/மனவளர்ச்சி குன்றிய மற்றும் கை ஊனமுற்ற 80 மாணவ, மாணவியர்களுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டு 4 மையங்களில் மேல்நிலை இரண்டாமாண்டு தனித்தேர்வர்கள் 1231 பேர் தேர்வெழுதவுள்ளனர். இவ்வாண்டு மேல்நிலை பொதுத் தேர்விற்கு உறங்கான்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி புதிய தேர்வு மையமாக அரசுத் தேர்வுத் துறையால் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர் புகைப்படம், பதிவு எண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும், தேர்வெழுத இருக்கும் பள்ளி மாணவர்கள். தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் சிறப்பு அறிவுரைகளுடன் அச்சிடப்பட்டு இருப்பதாகவும் அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பாக வினாத்தாள், விடைத்தாள்களில் அச்சிடப்படும் இந்த அறிவுரைகள் இம்முறை தேர்வுக்கு முன்னதாகவே ஹால் டிக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்களும், ஆசிரியர்களும் தேர்வு அறைகளில் செல்போன் எடுத்துவர அனுமதி கிடையாது.
இந்த அறிவுரையை மீறி தேர்வர்களோ, ஆசிரியர்களோ செல்போன் மற்றும் இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்ப துகண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் . பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க வசதியாக, தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்த அறை செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, உரிய விளக்கம் பெறலாம் என்று தேர்வு துறை அறிவித்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்தார்.