மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் அரசின் சார்பில் புகைப்படக் கண்காட்சி
கண்காட்சியில், அரசின் திட்டங்கள், அதை பெறும் வழிமுறைகள், சாதனைகள் ஆகியவை இடம் பெற்றிருந்தன;
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலத்தில் நடைபெற்ற அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி
மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சியானது, உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், விக்கிரமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது. இந்த கண்காட்சியை, விக்கிரமங்கலம் ஊராட்சித் தலைவர் தலைமையில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலி தளபதி தொடங்கி வைத்தார். உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வா. விநோத், மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையைச் சேர்ந்த ராஜ்குமார், ஊராட்சி துணைத் தலைவர், மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.இந்த புகைப் படக் கண்காட்சியில், அரசின் திட்டங்கள், அதை பெறும் வழிமுறைகள், சாதனைகள் ஆகியவை இடம் பெற்றிருந்தன.