பார் கேஷியரை வழிமறித்து ரூ.15 ஆயிரம் வழிப்பறி செய்த 8 பேர் கைது

மதுரையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 10 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்;

Update: 2023-06-11 10:30 GMT

மதுரை அருகே பார் கேசியரிடம்  வழிப்பறி செய்த நான்கு ரவுடிகள் உள்பட 8 பேர் கைது

மதுரை கே புதூர் விஸ்வநாதன் நகரை சேர்ந்தவர் செந்தில்வேல் 42. இவர் பார் ஒன்றில் கேசியராக வேலை பார்த்து வருகிறார் .இவர் டாக்டர் தங்கராஜ் சாலை உலக தமிழ் சங்கம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எட்டு பேர் அவரை வழிமறித்தனர்.அவர்கள் கத்தி முனையில் மிரட்டி அவரிடமிருந்து ரூபாய் 15 ஆயிரத்தை வழிப்பறி செய்து ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து செந்தில்வேல் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின் அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு ரவுடிகள் உட்பட 8 பேரை கைது செய்தனர் கைது செய்யப்பட்டவர்களில் நான்கு ரவுடிகள் அடங்குவார்கள்.  திருமங்கலம் விடத்தை குளம் கவியராசன் என்ற பொம்மைக் கையன் 23 ,பீ.பி.குளம் இந்திரா நகர் சதீஷ்குமார் என்ற குட்டீஸ் 24, செல்லூர் ஜீவா ரோடு ரவுடி பூபதி ராகவேந்திரா 21 ,பனங்காடி வாகைகுளம் பார்த்தசாரதி20, சொக்கிகுளம் அண்ணாநகர் ரவுடி ராம்குமார் என்ற போதை ராம்குமார் 26, ஆழ்வார்புரம் வைகை வடகரை ரவுடி மீனாட்சி சுந்தரம் என்ற மெட்ராஸ் மீனாட்சி 23,0 செல்லூர் ஜீவா ரோடு தம்பி ராஜ் 19, கோரிப்பாளையம் வேலாயுதம் பிள்ளை தெரு ரிஷி குமார் 19 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மண்டேலா நகரில் நின்ற வாகனம் மீது பைக்மோதி வாலிபர் பலி

மதுரை அருகே ஆண்டார் கொட்டாரம் குறிஞ்சி நகர் முத்துகிருஷ்ணன் மகன் அசோக் 27. இவர் அருப்புக்கோட்டை ரிங் ரோட்டில் பைக் ஓட்டிச் சென்றார்.அப்போது மண்டேலா நகரில் நின்று கொண்டிருந்த கனரக வாகனம்மீது மோதி விபத்தானது. இதில் தூக்கி வீசப்பட்ட அசோக்கிற்கு தலையில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.இந்த விபத்து குறித்து அண்ணன் அய்யனார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் அசோக்கின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செக்யூரிட்டி சர்வீஸ் அலுவலகத்தில் புகுந்து ரூ36 ஆயிரம், கம்ப்யூட்டர் பாகங்கள் திருட்டு 

கே புதூர் மண்மலைச்சாமி தெருவை சேர்ந்தவர் ஆனந்த் 48. இவர் செக்யூரிட்டி சர்வீஸ் மற்றும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நடத்தி வருகிறார் .இவருடைய அலுவலகம் திலகர்திடல் பகுதியில் உள்ளது.இவர் வெளியே சென்றிருந்தபோது அலுவலகத்துக்குள் புகுந்த பர்ம நபர் அங்கு வைத்திருந்த ரூ36 ஆயிரம்,மற்றும் கம்ப்யூட்டர் பாகங்களான மானிட்டர், சிபியூ, கீபோர்டு, மவுஸ் முதலியவைகளையும் திருடிச் சென்றுவிட்டார்.இந்த திருட்டு குறித்து ஆனந்த் திலகர்திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் அலுவலகம் புகுந்து திருதிய திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.

மதிச்சியத்தில் ஆடிட்டர் வீட்டில் 25 பவுன் தங்க நகைகள் ரூ 2 லட்சம் திருட்டு

மதுரை, மதிச்சியம் காந்தி நகர் ஆசாத் தெருவை சேர்ந்தவர் கீதா 56. இவர் செராமிக்ஸ் கடையில் ஆடிட்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டில் வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் பணம் ரூபாய் 2 லட்சம் திருடு போயிருந்தது. இந்த திருட்டு ஆடிட்டர் கீதாவுக்கு பின்னர் தெரியவந்தது. இதுகுறித்து அவர் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார் .இந்த புகாரில் வீட்டில் வேலை செய்யும் பெண் வேலையாள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பெண் ஊழியர் மற்றும் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் வெவ்வேறு இடங்களில் வாளுடன் இருந்த  சிறுவன் உட்பட 2 பேர் கைது

மதுரை திடீர் நகர் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் டி.எம். கோர்ட்டு சந்திப்பு அருகே சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபரை பிடித்தனர்.அவர் வாள் ஒன்றை வைத்திருந்தார். அவற்றை பறிமுதல் செய்து அவரிடம் விசாரித்தனர் .விசாரணையில் அவர் அச்சம்பத்துவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்று தெரிய வந்தது .அவர் அந்த பகுதியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட பதுங்கி இருந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்தனர்.

ஜெய்ஹிந்த்புரத்தில் வாலிபர் கைது

ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சோலையழகுபுரம் மூன்றாவது தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வாள் ஒன்றுடன் பதுங்கி இருந்த வாலிபரை பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பூமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபி மகன் மணிகண்டன் என்ற கரிக்கடை மணி 33 என்ற வாலி வரை கைது செய்தனர். அவரும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதற்காக அந்த பகுதியில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


Tags:    

Similar News