அலங்காநல்லூர் அருகே கம்மா பட்டியில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை
அலங்காநல்லூர் அருகே கம்மா பட்டியில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.;
மதுரை அருகே கம்மா பட்டியில் திருவிளக்கு பூஜை நடந்தது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தை குளம் கம்மா பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ வட காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ சமயபுரம் மாரி ஆகிய தெய்வங்களுக்கு பங்குனி பொங்கலையொட்டி, உலக நன்மை வேண்டியும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
முன்னதாக, கோயில் விழாக்குழு சார்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை, கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.