கவுல்பட்டி அருள்மிகு ரெக்கம்மாள் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா

Temple Kumbabhishekam ceremony;

Update: 2022-06-13 09:45 GMT

கவுல்பட்டி அருள்மிகு ஸ்ரீரெக்கம்மாள் திருக்கோவிலில் நடைபெற்ற  கும்பாபிஷேகம்

கவுல்பட்டி அருள்மிகு ஸ்ரீரெக்கம்மாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா கவுல்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரெக்கம்மாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.  விழாவையொட்டி, மதுரை பாலாஜி பட்டர் தலைமையிலான குழுவினர், கணபதி பூஜையுடன் யாகசாலை நிகழ்ச்சிகளை தொடங்கினர். தொடர்ந்து, விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, பூஜை வேத பாராயணம், மூலமந்திரம், ஹோமம் மற்றும் பூர்ணாஹூதி நடைபெற்று, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, கணபதி பூஜையுடன் யாக பூஜை நிகழ்ச்சிகள் தொடங்கின.



பூர்ணாஹூதி நிறைவடைந்து, கடம் புறப்பாடாகி, திருக்கோவிலை வலம் வந்து காலை சுமார் ஒன்பதரை மணி அளவில் கோவிலில் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து, ராஜ கோபுரத்தின் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது ,கருடன் வானத்தில் வட்டமிட்டது . பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

பால், தயிர், நெய், வெண்ணெய் உட்பட பல வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோவிலின் அருகே அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ ரெக்கம்மாள் கோயில் பங்காளிகள் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியை விக்கிரமங்கலம் போலீஸார் செய்திருந்தனர்.

Tags:    

Similar News