சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் அருள்மிகு விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்
காலை 9 மணி அளவில் கடம் புறப்பாடாகி, சுமார் பத்து மணி அளவில் கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது;
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி, கணபதி பூஜையுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கின. சிவகங்கை மகாபிரபு சிவாச்சாரியார் தலைமையில் கோவில் நிர்வாகிகள் கந்தசாமி பிள்ளை குடும்பத்தினர் மற்றும் முன்னிலையில் யாகசாலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து, பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை இரண்டாம் கால யாக பூஜை நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று, நான்கு கால யாக பூஜைகள் மஹா பூர்த்தியுடன் நிறைவுற்றது. காலை 9 மணி அளவில் கடம் புறப்பாடாகி, சுமார் பத்து மணி அளவில் கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது, வானத்தில் கருடன் வட்டமிட்டது. கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷமிட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.
விழாவில், மன்னாடிமங்கலம் ஒன்றியக் கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரங்கராஜன், திருமுருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.