விக்கிரமங்கலம் அருகே கோயில் திருவிழாவில் கிடாய் முட்டு போட்டி

கல்புளிச்சான்பட்டி மந்தை அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு கிடாய் முட்டு போட்டி நடைபெற்றது;

Update: 2023-04-11 08:30 GMT

விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டி மந்தை அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு கிடாய் முட்டு போட்டி நடைபெற்றது.

 மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டி மந்தை அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு கிடாய் முட்டு போட்டி நடைபெற்றது.

சோழவந்தான் விக்கிரமங்கலம் அருகே, கல்புளிச்சான்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மந்தை அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கிடாய் முட்டு போட்டி  நடைபெற்றது. போட்டியினை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் துவக்கி வைத்தார்.  இதில், சுமார், 100 கிடாய் ஜோடிகள் கலந்து கொண்டன.  போட்டியில் வெற்றி பெற்ற ஆட்டுக் கிடாய்களுக்கு பித்தளை அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், செல்லம்பட்டி யூனியன் சேர்மன் கவிதா ராஜா, விழா கமிட்டியின் தலைவர் வீரசிங்கம் , குண்டு ராஜா, கடவுள், முத்துப்பாண்டி, காசி, மூர்த்தி, கேப்டன் ராஜ், பவித்ரன் ,விஜயன், சுபாஷ் ,பால்பாண்டி, சதீஷ்பாண்டி, விஜித்குமார், தியாகு, திருநாவுக்கரசு, குரும்பன், சுந்தரபாண்டி, ராம்கி, சுர்ஜித், அஜீத், மலைச்சாமி, சிவானந்த், கோகுல், ராகுல், ஹர்சவர்தன், யோகேஸ்வரன், அகிலன், நிதியரசு, சித்திக், சுரேஸ் மற்றும் மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிடாய் முட்டு ஆர்வலர்கள் கிடாய் உரிமையாளர்கள் உட்பட பல்வேறு நபர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News