விக்கிரமங்கலம் அருகே கோவில் விழாவில் கிடாய் முட்டு விழா: வென்ற கிடாய்களுக்கு பரிசு

உயர்நீதிமன்ற அனுமதியுடன் நடந்த விழாவில் மதுரை, தேனி, சிவகங்கை ராமநாதபுரம் பகுதிகளிலிருந்து 80 ஜோடி கிடாய்கள் பங்கேற்பு

Update: 2022-04-27 06:15 GMT

விக்ரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் மந்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு  நடந்த கிடாய் முட்டுவிழா.

மதுரை மாவட்டம்,   செல்லம்பட்டி ஒன்றியம், கல்புளிச்சான்பட்டி கிராமத்தில், அருள்மிகு ஸ்ரீ மந்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கிடாய் முட்டு விழா நடைபெற்றது.

உயர்நீதிமன்ற அனுமதி பெற்று தகுந்த பாதுகாப்புடன் நடைபெற்ற விழாவில், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 80 ஜோடி கிடாய்கள் கலந்து கொண்டன.75 அடி , அதாவது முட்டுக்கள் முட்டி களத்தில் நின்றால் சரி பாதி என பரிசுகள் அறிவிக்கப்பட்டது .வெற்றி பெற்ற கிடாய்களுக்கு பித்தளை பானை மற்றும் அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில், உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், கிடா முட்டு சங்கத்தலைவர் வீரசிங்கம், முத்துப்பாண்டி, பவித்திரன், விஜயன், ராம்கி, கேப்டன், குன்ராஜா அஜித் சுஜித் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, கல்புளிச்சான்பட்டி கிராமத்தினர் செய்திருந்தனர். செக்கானூரணி காவல் ஆய்வாளர் சிவசக்தி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News