வாடிப்பட்டி அருகே ஜடாமுனீஸ்வர ஆலய மண்டல பூஜை

சிறுமலை அடிவாரம் செமினிபட்டி அருள்மிகு ஸ்ரீ ஜடாமுனீஸ்வரர் கோவில் மண்டல பூஜை விழா நடைபெற்றது.

Update: 2022-04-30 07:08 GMT

சிறுமலை அடிவாரம் செமினிபட்டி அருள்மிகு ஸ்ரீ ஜடாமுனீஸ்வரர் கோவில் மண்டல பூஜை விழா நடைபெற்றது.

சிறுமலை அடிவாரம் செமினிபட்டி அருள்மிகு ஸ்ரீ ஜடாமுனீஸ்வரர் கோவில் மண்டல பூஜை விழா யாக வேள்வி:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, சிறுமலை அடிவாரத்தில் செமினி பட்டி அருகே அருள்மிகு ஸ்ரீ ஜடாமுனீஸ்வரர் நாற்பத்தி எட்டாவது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, பூர்ணாஹூதியுடன் யாக வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து, முனீஸ்வரருக்கு பால், தயிர், வெண்ணெய் நெய் உட்பட ஒன்பது வகையான அபிஷேகம் நடைபெற்றது. தீபாராதனை காட்டப்பட்டு, தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. மண்டல பூஜைக்கான ஏற்பாடுகளை, திருப்பணிக்குழு தலைவர் ஆதி.முத்துக்குமார் மற்றும் விழா கமிட்டியினர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News