மதுரை புறநகர் பகுதியில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
மதுரை மாவட்டம் திருமங்கலம் ,திருநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் கொட்டியமழையால் மக்கள் மகிழ்ச்சி;
மதுரை மாவட்ட புறநகர் பகுதியில் பலத்த மழை
மதுரை மாவட்டம் திருமங்கலம் ,திருநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் விடாது கொட்டியமழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்..மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், மற்றும் திருமங்கலம் ,திருநகர் , மகாலட்சுமி காலனி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் ,இன்று காலை முதல் கடும் வெயில் பெருமளவில் வாட்டி வந்த நிலையில் ,இரவு நேரத்தில் திடீரென ஒரு மணி நேரமாக விடாது கொட்டி தீர்த்த மழையினால், கடை வியாபாரிகள் வியாபாரமின்றி சிரமப்பட்டனர். பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்,