மதுரை அருகே உசிலம்பட்டியில் பலத்த மழை!
மதுரை அருகே உசிலம்பட்டியில் பலத்த மழையால் மழைநீர் பல பகுதிகளில் தேங்கியது.
மதுரை மாவட்டம்,உசிலம்பட்டியில் கனமழையால் மழை நீர் வெளியேறுவதற்கு வழியின்றி பள்ளி விளையாட்டு மைதானம் குளம் போல் தேங்கியதால், தினசரி நடைபயிற்சியினர் மற்றும் விளையாட்டு பயிற்சியினர் பாதிப்படைந்துள்ளனர். தேங்கியுள்ள மழை நீரை மாவட்ட நிர்வாகம் அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறுபகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில், நேற்றுசுமார் 56 மில்லி மீட்டர் மழை பெய்ததாக கூறப்படுகிறது. இதனால் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில்மழை நீர் வெளியியேறுவதற்கு வழியின்றி, காணப்படுகிறது.இதனால்,மழைநீர்குளம் போல் தேங்கி காட்சியளிக்கிறது.
இதனால், நகர்பகுதிகளில் உள்ள தினசரி நடைபயிற்சி செய்வோர் மற்றும் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதனை மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து குளம் போல் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.