செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஐம்பெரும் விழா

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஐம்பெரும் விழா நடைபெற்றது.;

Update: 2022-04-01 10:56 GMT

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஐம்பெரும் விழா.

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஐம்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ,வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, கீதா முன்னிலை வகித்தனர்.

உதவி திட்ட அலுவலர்கள் மரியா, சின்னத்துரை, காளிதாஸ், குமாரசாமி, வெள்ளபாண்டி ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார். வேலைவாய்ப்பு முகாமில் ,25 நிறுவனங்களும், 450க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்ட நிலையில், தேர்வு செய்யப்பட்வர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

மேலும், செல்லம்பட்டி வணிக வளமையம் திறக்கப்பட்டு வணிகம் செய்யும் 50 பயனாளிகளுக்கு ரூ.10 இலட்சம் காசோலை வழங்கப்பட்டது. வட்டார அளவில் நடைபெற்ற ஊட்டச்சத்து போட்டியில் ,பங்கேற்ற 29 ஊராட்சிகளுக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. உசிலம்பட்டி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.35 இலட்சம் வங்கி கடன் ஆணை வழங்கப்பட்டது.

மேலும் புள்ளநேரி ஊராட்சி கூட்டமைப்பு மூலம் செயல்படுத்தப்படும் பெண் சக்தி மரசெக்கு எண்ணெய் கூடத்தை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் காளிதாஸ் கலந்து கொண்டு திறந்து வைத்தார். பணி நியமன ஆணை, உதவி குழு உறுப்பினர்களுக்கு காசோலையும் வழங்கினார்.

இதில் செல்லம்பட்டி ஒன்றிய குழுத் தலைவர் கவிதாராஜா, துணைத்தலைவர் மணிகண்டன் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார இயக்க மேலாளர் சந்திரசேகர், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அன்னபாண்டி, பூங்கொடி, தாய்ப்பிள்ளை ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News