மதுரை அருகே சேறும் சகதியுமாக காணப்படும் அரசு போக்குவரத்து கழக பணிமனை

செக்கானூரணி அரசு போக்குவரத்து பணிமனை மழை நீரால் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கும் அவலம் நீடிக்கிறது;

Update: 2023-10-19 11:30 GMT

சேறும் சகதியுமாக  காணப்படும்  செக்காணூரணி அரசு போக்குவரத்து கழக பணிமனை.

 மழை நீரால் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கும் செக்கானூரணி அரசு போக்குவரத்து பணிமனை முறையாக பராமரிப்பு பணிகள் செய்து பணிமனையை மேம்படுத்த வேண்டுமென  அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை அருகே செக்கானூரணி போக்குவரத்து பணிமனை கடந்த பல்வேறு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மதுரை தேனி  பிரதான சாலையில் உள்ளது. இந்த போக்குவரத்து பணிமனையை ஒட்டி போக்குவரத்து தொழிலாளர்கள் ஓட்டுநர் நடத்துனர் பணிமனை ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர் தினசரி வந்து செல்கின்ற இடமாக உள்ளது.

சுமார் 40க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகள் இங்கிருந்து சென்று வருகின்றன. அவ்வப்போது, மதுரை மத்திய பணிமனை அதிகாரிகளும் வந்து செல்வார்கள். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து பணிமனை போதிய பராமரிப்பின்றி மழை நீரால் சூழ்ந்து நோய்த் தொற்றும் அவலத்தை ஏற்படுத்தி வருகிறது. சிறிய மழை மற்றும் லேசான தூறல் இருந்தாலும் போக்குவரத்து பணிமனை முழுவதும் சேரும் சகதி அதிகமாக காணப்படும் சூழ்நிலை உள்ளது.

இதனால், போக்குவரத்து பணிமனையில் பணி புரியும் ஊழியர்கள் வயல்வெளியில் வேலை செய்வது போல் உண்டாகும் சூழ்நிலை உள்ளது. இது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் மேலாளரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்ற பின்னரும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.  பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவது கிடையாது. அதன் தொடர்ச்சியாகவே பேருந்து பணிமனைகளும் கட்டமைப்பும் முறையாக பராமரிக்காத அவல நிலை நீடித்து வருகிறது. போக்குவரத்து துறை அமைச்சர் நேரடியாக ஆய்வு செய்து பேருந்து, பணிமனையின் கட்டமைப்பை சரி செய்து போதிய பேருந்துகளை முறையாக இயக்க ஆவண செய்ய வேண்டும் என்று செக்கானூரணி பணிமனை ஊழியர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News