அரசியல்வாதிகள் தடுத்தும் பள்ளிக்கு சென்ற மாணவிகள்

உசிலம்பட்டியில், பள்ளிக்கு சென்ற மாணவ மாணவிகளை தடுத்து போராட்டத்தை நடத்திய அரசியல்வாதிகளிடம், அப்படித்தான் பள்ளிக்கு செல்வோம் என, பேசி அதிரவைத்த மாணவிகளின் வீடியோ வைரலாகி வருகிறது.;

Update: 2024-07-13 16:31 GMT

உசிலம்பட்டி அருகே ,அரசியல் வாதிகள் தடுத்தும்  பள்ளிக்கு  சென்ற மாணவிகள்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஜாதிப் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்றும், ஆதிதிராவிடர் நலப் பள்ளி மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் ஜாதிப் பெயர்களை மாற்றி அரசு பள்ளிகளாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட சீரமைப்பு கருத்துக்கள் அடங்கிய முன்னாள் நீதிபதி சந்துருவின் தனிநபர் அறிக்கை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம்  ஒப்படைக்கப்பட்டது.

முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து பார்வர்ட் பிளாக் அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு பிரமலைக்கள்ளர் சமுதாயக் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம், போடி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கள்ளர் பள்ளிகளில் மாணவர்களை வகுப்பு புறக்கணிப்பு செய்ய வைத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் கள்ளர் சீரமைப்புத்துறை, ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பார்வட் ப்ளாக் கட்சியினர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்தனர்.

இந்நிலையில், பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை வாசலிலேயே தடுத்து நிறுத்தி, வீட்டிற்கு திருப்பி அனுப்பிய சூழலில் உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவிகள் அரசியல் கட்சியினருடன் அப்படித் தான் பள்ளிக்கு செல்வோம், எங்கள் ஆசிரியர் எங்களை வர சொல்லியுள்ளார், எங்களை ஏன் தடுக்கிறீர்கள் என அதிரடியாக பேசி காவல்துறை பாதுகாப்புடன் பள்ளிக்கு சென்றவீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News