சோழவந்தான் அருகே விலையில்லா மிதிவண்டி வழங்கல்
சோழவந்தான் அருகே அய்யப்ப நாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது;
சோழவந்தான் அருகே அய்யப்ப நாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் இலவச மிதி வண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது .
ஒன்றிய கவுன்சிலர், வாடிப்பட்டி தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் தலைமை வகித்தார்.
வழக்கறிஞர் முருகன், மன்னாடி மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பவுன் முருகன், மணிவேல், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, இளைஞர் அணி நிர்வாகி வெற்றிச் செல்வன், முன்னிலை வகித்தனர் கிளைச் செயலாளர் தமிழ் என்ற சின்னச்சாமி வரவேற்றார் .
பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம், முத்துப்பாண்டி, ராமமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் திமுக நிர்வாகிகள் திருமுருகன், ராஜசேகர் , முருகேசன், ஜெயச்சந்திரன், பால் கண்ணன் தில்லை நடராஜன், சின்னச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.