மதுரையில் கண் தான வார விழா விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் தொடக்கம்
38 வது தேசிய கண் தான வார விழா 25 ஆகஸ்ட் 23 முதல் 8 செப்டம்பர் 23 வரை கொண்டாடப்படுகிறது.;
38வது தேசிய கண் தான வார விழாவில் கண்ணை கட்டிக்கொண்டு பேரணியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார்.
மதுரை, அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக 38வது தேசிய கண் தான வார விழா 25 ஆகஸ்ட் 23 முதல் 8 செப்டம்பர் 23 வரை கொண்டாடப்படுகிறது.இதன் முதல் நிகழ்வாக இன்று பார்வையற்றோர் நடை (blind walk ) நடத்தப்பட்டது.
தேசிய கண்தான இருவார விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25 முதல் செப். 8-ம் தேதிவரை அனுசரிக் கப்படுகிறது. இந்த ஆண்டில் உச்ச பட்ச அளவுக்கு விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கண் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிகழ்வை, மாவட்ட ஆட்சியாளர் சங்கீதா தொடங்கி வைத்து, கண்களை கட்டிக்கொண்டு நடந்து வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்நிகழ்வானது, அண்ணா பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து அரவிந்த் கண் மருத்துவமனை உள் நோயாளிகள் பிரிவு வரை சென்று முடிவடைந்தது. இந்தப் பேரணியின் நோக்கமாக பார்வையற்றோர் வாழ்க்கையில், உள்ள சிரமங்களை நாம் அனுபவித்து, அதற்குள்ள தீர்வாகிய கண்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆகும்.
இதில் அரவிந்த் கண் மருத்துவமனை முதன்மை கண் மருத்துவர் கிம், டாக்டர் கிருஷ்னதாஸ், ராமநாதன் மற்றும் மருத்துவர்கள்,பணியாளர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
இந்தியாவில் கருவிழி பாதிப்பால் பார்வையிழந்து தானம் வழங்கப் படும் கண்களை எதிர்பார்த்து 10 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். கண் தானத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாமையே இந்த நிலைக்கு காரணம். இதைத் தவிர்க்க இன்று (ஆக.25) தொடங்கும் தேசிய கண்தான விழிப்புணர்வு இரு வார விழாவை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.