மதுரை புறநகர் பகுதிகளில் கடுமையான குளிர்: பகலில் கடும் வெப்பம்

மதுரை புறநகர் பகுதிகளில் கடுமையான குளிர் அதிகாலை தாண்டி நீடிக்கிறது. அதே நேரம் பகலில் கடும் வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Update: 2023-03-06 12:49 GMT

மதுரை புறநகர் பகுதியில் பனிப்பொழிவு அதிகம் சிவக்கும் கீழ்வானம்

மதுரை: மதுரை மாவட்டத்தில், பல கிராமங்களில் அதிக பனிப்பொழிவால் மல்லிகை பூ உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும், பலருக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்களால் மக்கள் அவதியுறுகின்றனர்.

மாசி பிறந்ததும் பனி குறைந்து வெயில் வரும் என்று கூறுவார்கள்.  மார்கழியுடன் நின்றுவிடும் பனி, தையில் கொஞ்சம் இருப்பது வழக்கமானதுதான். ஆனால் மாசியில் வெயில் அடிக்க ஆரம்பித்த பிறகும், பனி தொடர்கிறது. அதிகாலை 4  மணிக்கே பனி பெய்யத் துவங்கி, காலை 8 மணி வரைக்கும் பனி பெய்து வருகிறது.

மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான், காடுபட்டி, விக்கிரமங்கலம், ஊத்துக்குளி, தென்கரை, குருவித்துறை, நாராயணபுரம், கருப்பட்டி, அலங்காநல்லூர் ,அழகர் கோவில், சத்திரப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில், அதிகாலை 4 மணி முதல் பனிப்பொழிவு அதிகம் காணப்படுகிறது. இப்பனிப் பொழிவால், பொதுமக்களுக்கு சளி, இருமல் உள்ளிட்ட தொந்தரவு ஏற்படுகிறது.

மேலும், நிலக்கோட்டை, சிலுக்குவார் பட்டி, கொடைரோடு, மாவுத்தன் பட்டி ஆகிய கிராமங்களில் அதிக பனிப்பொழிவால் மல்லி உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால், மல்லிகை பூ விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மேலும், மதுரை நகர் பகுதியில் மாலை 7 மணிக்கு மேல் பனிப்புலிவு ஏற்படுகிறது. இப்பனி பொழிவானது,  காலை 8 மணி வரை தொடர்கிறது.

இதனால் ,பொதுமக்கள், வயதானவர்கள் வெளியில் நடமாட அச்சப்படுகின்றனர். பொதுவாக, பனிப்பொழிவானது மாசியுடன் குறையும் என பலர் தெரிவிக்கின்றனர். சித்திரை வைகாசி மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும்.

Tags:    

Similar News