உசிலம்பட்டி, தேவர் கல்லூரி முதல்வர் மீது, லஞ்ச ஓழிப்புத் துறை வழக்கு:

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி முதல்வர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது;

Update: 2021-12-02 10:00 GMT

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி முதல்வர் ரவி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி முதல்வராக இருப்பவர் O.ரவி இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வு துறை கண்காணிப்பாளராக கடந்த 07.11.2017 முதல் 01.01.2020 வரை பணியாற்றி வந்தார்

அவர் பணி செய்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 2,91,10,180 ரூபாய்க்கு சொத்துக்களை வாங்கி குவித்ததாக மதுரை மாவட்ட ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை  வழக்கு பதிவு செய்தது.  இவருக்கு  உடந்தையாக இருந்ததாக ரவியின் மனைவி சுமதி  பெயரிலும் லஞ்ச ஒழிப்பு துறை காவலர்கள் வழக்கு பதிவு செய்தனர்.

அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வு துறை கண்காணிப்பாளராக பணியாற்றியபோது அவர் பெயரிலும் அவரது மனைவி சுமதி பெயரிலும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு சொத்துக்களை வாங்கி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Tags:    

Similar News