சோழவந்தானில், போதை ஒழிப்பு தடுப்பு தினம்! உறுதி மொழி ஏற்பு!
மதுரை சோழவந்தானில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு ஊர்வலமாக வந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சோழவந்தானில் காவல்துறை அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவேடகம் விவேகானந்தா கல்லூரி, சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியோர் சர்வதேச போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு ஊர்வலமாக வந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு சமயநல்லூர் துணை சூப்பிரண்ட் பாலசுந்தரம் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று மாணவ மாணவிகள் ஊர்வலத்தை கொடி அசைத்து தொடக்கி வைத்து உறுதிமொழி வாசித்தார் ஊர்வலம் மாரியம்மன் கோவில் சன்னதி தெரு பெரிய கடை வீதி தெற்கு ரத வீதி மேலரது வீதி வடக்கு வீதி வழியாக ஊர்வலமாக வந்து புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
முன்னதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் வரவேற்றார். போதை தடுப்பு விழிப்புணர் குறித்து பேரூராட்சி தலைவர் ஜெயராமன் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்ய பிரகாஷ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்து தலைமை காவலர்கள் மாரியப்பன் பெரியமாயன் உக்கர பாண்டியன் ஆகியோர் பேசினார்கள்.
இதில் விவேகானந்தா கல்லூரி முதல்வர் வெங்கடேசன் அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தீபா உட்பட மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர். சப் இன்ஸ்பெக்டர் சேகர் நன்றி கூறினார்