தேர்தல் வாக்குறுதிகள திமுக நடைமுறைப்படுத்த வேண்டும்: விஸ்வஹிந்துபரிஷத்
சுமார் 175-க்கும் மேற்பட்ட கிராம கோயில்களை புறம்போக்கு இடத்தில் உள்ளதாக கண்மூடித்தனமாக இடித்தது வேதனை அளிக்கிறது;
தேர்தல் அறிக்கையை நடைமுறை படுத்துவதற்கு பதிலாக, திராவிட கொள்கைகளை விரிவு படுத்தும் ஆட்சி செய்கிறது திமுக என்றார் விஸ்வஹிந்துபரிஷத் நிறுவனர் வேதாதந்தம்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் ,மதுரை மாவட்ட மாநாடு, விசுவ ஹிந்து பரிஷத் நிறுவனர் வேதாந்தம், மாநில தலைவர் கோபால்ஜி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மாநாட்டின் முடிவில், விசுவ ஹிந்து பரிஷத் நிறுவனர் வேதாந்தம் செய்தியாளர்களிடம் மேலும் பேசியதாவது: ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப் போராரு என விளம்பரம் செய்து ஆட்சிக்கு வந்த திமுக கொஞ்சம் கொஞ்சமாக இந்துத்துவ கொள்கைகளுக்கு மாறாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து, அதற்கு பதிலாக திராவிடக்கொள்கைகளை விரிவு படுத்தும் செயலில் இறங்கியுள்ளது. ஆட்சிக்கு வந்த நாள் முதல்சுமார் 175-க்கும் மேற்பட்ட கிராம கோயில்களை புறம்போக்கு இடத்தில் உள்ளதாக கண்மூடித்தனமாக இடித்து தள்ளியுள்ளது.வேதனை அளிக்கிறது. இது போன்ற கோயில்களை ஆய்வு செய்து பழம்பெருமை வாய்ந்த கோயில்களுக்கு கோயில் பெயரிலேயே பட்டா வழங்க வேண்டும் என்றார் அவர்.
இதில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அகில இந்திய பார்வட் பிளாக் மாநில பொது செயலாளர் கதிரவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்களும், மதுரை மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் அதிகமான கிராம கோயில்களின் 500க்கும் மேற்பட்ட பூசாரிகளும் கலந்து கொண்டனர்.