மதுரையில் முன்விரோதத்தால் தகராறு: ஆறு பேர் கைது

மதுரையில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 12 பேரை போலீஸார் கைது செய்தனர்;

Update: 2023-04-15 11:00 GMT

பைல் படம்

ஜெய்ஹிந்தபுரத்தில் முன் விரோதத்தில் இரு தரப்பினர் மோதல்: ஆறு பேர் கைது.

மதுரை,ஜெய்ஹிந்த்புரம் புலி பாண்டியன் தெருவை சேர்ந்தவர் காந்தி மகன் வெங்கடேஷ் குமார்(28.).வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பத்தைச் சேர்ந்தவர் சதுரகிரி மகன் செல்வகுமார்(21.) இவர்கள் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், வெங்கடேஷ்குமாரின் தந்தை ராமையா தெரு அவ்வையார் ஒன்பதாவது தெருவில் சென்றபோது வழிமறித்த செல்வகுமார் ,காவேரி மணி, 17வயது சிறுவன் ஆகியோர் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர் . இதனால், அவர்கள் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இருதரப்பிலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து, வெங்கடேஷ்குமார் ஜெயந்த்புரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார், வழக்குப் பதிவு செய்து அவரது தந்தையை தாக்கிய வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு சதுரகிரி மகன் செல்வகுமார் 21, ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் இந்திரா நகர் 7வது தெரு பாலமுருகன் மகன் காவேரி மணி 19, பதினேழு வயது சிறுவன் உள்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் மூவரையும் கைது செய்தனர் .

இந்த மோதல் குறித்து செல்வகுமார் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் .அவர்கள் ஜெய்ஹிந்த்புரம் புலி பாண்டியன் தெரு, பால்சாமி மகன் காந்தி, எம். எம். சி. காலனி இரண்டாவது தெரு ஆறுமுக நகர் முகமது ரபீக் ராஜா(42 ) ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெரு திருமலை தெரு பாலமுருகன்(42 )ஆகிய மூன்று மீது வழக்கு பதிவு செய்து மூன்று  பேரையும் கைது செய்தனர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறு பேரை கைது செய்தனர்.

மைனர் பெண் திருமணம் குறித்து இரண்டு பேரிடம் போலீஸ் விசாரணை

குழந்தை பிறந்த பின்பு மைனர் பெண் திருமணம் தெரிய வந்தது குறித்து இரண்டு பேரிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மகபூப்பாளையம் வைத்தியநாதபுரம் கங்கை காலனியை சேர்ந்தவர் கண்ணன் மகன் திணேஷ் பவர் சிங்( 23.) இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மைனர் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார் .பின்னர் சிறுமி கருவுற்று தற்போது, குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்புதான் சிறுமி மைனர் பெண் தெரிய வந்தது.

இது குறித்து தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் தினேஷ்பவர்சிங் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு திருமணம்.

திருப்பரங்குன்றம் கீழத்தெரு நடுத்தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் சந்தோஷ் கோபிகிருஷ்ணன்(28 ).இவர் கடந்த மாதம் 10 மாதங்களுக்கு முன்பு மைனர் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். அந்த சிறுமிக்கும் தற்போது குழந்தை பிறந்தது. பின்னர்தான் அந்த சிறுமி மைனர் பெண் திருமணம் என, தெரிய வந்தது. இது குறித்து, திருப்பரங்குன்றம் குழந்தைகள் நல அலுவலர் சுமதி திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ,போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் சந்தோஷ் கோபி கிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரவை மார்க்கெட்டில்  பெயிண்டர் பலி.

மதுரை பரவை மார்க்கெட்டில் ரத்த வாந்தி எடுத்த பெயிண்டர் பலியானது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பரவை வல்லவன் நகரை சேர்ந்தவர் அசோக்குமார்( 42.) இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது .பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.சம்பவத்தன்று ,பரவை மார்க்கெட் வாட்ச்மேன் அறை அருகேவேலை செய்துகொண்டிருந்தபோது ,திடீரென்று ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை, சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று சேர்த்தனர்.அங்கு சிகிச்சை மலனின்றி பெயிண்டர் அசோக் குமார் பரிதாபமாக உயிரிழந்தார் .இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி கொடுத்த புகாரில் கூடல் புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் இரண்டு வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது.

மதுரை, தென்பரங்குன்றம் சித்தி விநாயகர் கோவில் தெரு சசிகுமார் மகன் விக்னேஸ்வரன்(21.) இவர், மீது கொலை முயற்சி ,கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.இவரது செயலை போலீசார் கண்காணித்து வந்தனர்.தொடர்ந்து, அவர் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின் பேரில், வாலிபர் விக்னேஸ்வரனை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

மற்றொரு வாலிபர் கைது

தென்பரங்குன்றம் விஸ்வகர்மா நகர் 1வது தெருவை சேர்ந்தவர் கோபி மகன் ராஜா என்ற சிங்கிராஜா 21 .இவர் மீதும் கொலை முயற்சி பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன .இந்த நிலையில் இவரது இந்த குற்ற செயலை கட்டுப்படுத்துவதற்காக, போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவின் பேரில், போலீசார் ராஜா என்ற சிங்கராஜாவைக் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

தத்தனேரியில் பள்ளி அருகே சிகரெட் விற்பனை: வாலிபர் கைது.

மதுரை தத்தனேரி கொன்னவாயன் சாலையில், பள்ளிக்கூடம் அருகே சிகரெட் விற்பனை விற்பனை செய்வதாக, செல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தார். அப்போது, அங்கு விற்பனை செய்த தத்தனேரி பள்ளிவாசல் தெரு காஜா மைதீன் மகன் சுல்தான் ரியாஸ்(35 )என்பவரை கைது செய்தார் .அவரிடம் இருந்து 30க்கு மேற்பட்ட சிகரெட் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வில்லாபுரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை. முதியவர் உட்பட மூன்று பேர் கைது.

மதுரை  வில்லாபுரம் மீனாட்சி நகர் முதல் தெருவில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதாக அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது .போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர் அவர்கள் .அங்கு கண்காணித்தபோது அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த மூன்று பேரை பிடித்தனர். பிடிபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் வில்லாபுரம் மாடர்ன் நகர் சக்தி நகர் விஸ்வநாதன்(60,). வில்லாபுரம் மீனாட்சி நகர் சோனையா பிள்ளை சந்து குமார்(48,) அதேபகுதியை சேர்ந்த சிவகுமார்(45 )என்று தெரியவந்தது. அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகளையும் விற்பனை செய்த பணம் 16 ஆயிரத்து 540ஐயும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News