சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய திருவிழாவில் பக்தர்கள் பால் குடம் எடுத்து வழிபாடு
Devotees take jug milk worship Zenagai Mariamman Temple Festival;
சோழவந்தான் மாரியம்மன் கோயிலுக்கு பால்குடம் எடுத்துச்சென்ற பக்தர்கள்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா பால்குடம் அக்னிசட்டி எடுத்த பக்தர்கள்
சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான அக்னி சட்டி பால்குடம் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். குறிப்பாக சோழவந்தானில் அமைந்துள்ள வைகை ஆற்றில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து சோழவந்தானில் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து ஜெனகை மாரியம்மனுக்கு.தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டி நேர்த்தி கடன்செலுத்தி வருகின்றனர். மேலும் பெண்கள் மற்றும் பக்தர்கள் உருண்டு கொடுத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 21-ஆம் தேதி நடைபெறுகிறது