மதுரை காமராஜர் பல்கலையில் தொகுப்பூதிய பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய பணியாளர்கள் பல்வேறு காேரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.;
மதுரை மாவட்டம், காமராஜர் பல்கலைகழகத்தில் பணி புரியும் தற்காலிக, தொகுப்பு ஊதிய பணியாளர்களுக்கு சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக துணை வேந்தர் அலுவலம் முன்பு இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக 243 பேர் தொகுப்பூதிய அலுவலக பணியாளர்களாகவும், பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மாதம் ஆகஸ்ட் 4 ம்தேதி நடந்த, சிண்டிகேட் கூட்டத்தில் சம்பளம் உயர்வு வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.
சிண்டிகேட் கூட்ட பரிந்துரையின் பிரகாரம், இன்று வரையில் அதற்கான எந்த வித தொகுப்பூதிய பணியாளர்களுக்கு உரிய சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. தற்போது, தொகுப்பூதிய பணியாளர்களுக்கு இது முற்றிலும் மறுக்க படுவது போல உள்ளது.
தொகுப்பூதிய தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க கோரி, தற்போது தமிழகத்தின் ஆட்சி புரியும் திமுகவின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதனை முறையான நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு, பணி நிரந்தரம், ஊதிய வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட வேண்டுகிறோம் என்றனர்.
தொடர்ந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் முன்பு தொகுப்பூதிய பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தால் சற்று காமராஜர் பல்கலை வளாகத்தில் பரபரப்பு நிலவியது. பல்கலை பதிவாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என தெரிவித்தனர்.