மதுரை அருகே தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் பலி: வனத்துறை விசாரணை

பல்கலைக்கழக வளாகத்தினுள் சுமார் 3 வயது மதிக்கதக்க ஆண் புள்ளி மான் உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தது;

Update: 2022-02-26 06:45 GMT

புள்ளி மான்(பைல் படம்)

மதுரை அருகே  தாகம் தீர்க்க தண்ணீர் தேடி வந்த புள்ளி மான் நாய் கடித்து பலியான சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டியுள்ள  நாகமலை வனப்பகுதியில் மான், மயில் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள்  வாழ்ந்து வருகின்றன.  இந்த விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியன அவ்வப்போது பல்கலைக்கழக வளாகத்திற்க்குள் வந்து செல்வது வழக்கம்.  இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தினுள் சுமார் 3 வயது மதிக்கதக்க ஆண் புள்ளி மான் உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தது. இதனைக் கண்ட பல்கலைக்கழக ஊழியர்கள் நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வனத்துறைக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, அங்கு வந்த வனத்துறையினர் மான் உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முதல் கட்ட விசாரணையில் தண்ணீர் தேடி மான் வந்திருக்கலாம். அப்போது நாய்கள் அந்த மானை துரத்தி கடித்ததால் இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளதாக தெரியவந்ததுள்ளது. விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News