கொரோனா: முன்களப்பணியாற்றியபோது உயிரிழந்த டாக்டர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்
பணியின் போது நோய் தொற்று ஏற்பட்டு மரணமடைந்த முன்கள பணியாளர்களான 5 அரசு மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டது
கொரோனா நோய்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த முன்கள பணியாளர்களான 5 அரசு மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி தொகை ரூ.25 இலட்சத்திற்கான காசோலையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் .எஸ்.அனீஷ் சேகர் வழங்கினார்:
கோவிட்-19 கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியின் போது நோய் தொற்று ஏற்பட்டு மரணமடைந்த முன்கள பணியாளர்களான 5 அரசு மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதி தொகை தலா ரூ.25 இலட்சம் என, மொத்தம் 1 கோடியே 25 இலட்சத்திற்கான காசோலையினை, உயிரிழந்த மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் வழங்கினார். இந் நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (சுகாதாரம்)வெங்கடாசலம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.