உசிலம்பட்டியில், சைபர் கிரைம் குற்றங்கள்: விழிப்புணர்வு ஊர்வலம்
Cyber Crime Awareness Rally மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.;

உசிலம்பட்டியில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தை, போலீஸ் எஸ் .பி .
துவக்கி வைத்தார்
Cyber Crime Awareness Rally
உசிலம்பட்டியில், மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை ,மதுரை மாவட்ட எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஸ் துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
Cyber Crime Awareness Rally

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரோ பிரவீன் உமேஸ் தலைமையேற்று கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்து ,பேரணியில் நடந்து சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில், மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்த்துறை, உசிலம்பட்டி காவல் சரகத்திற்குட்பட்ட காவல்த்துறையினர் மற்றும் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இந்த பேரணியை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரோ பிரவீன் உமேஸ் தலைமையேற்று கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்து ,பேரணியில் நடந்து சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் துவங்கிய இந்த பேரணி, உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த பதாதைகளை ஏந்தியவாறு மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்று உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு நிறைவு செய்தனர்.