உசிலம்பட்டி அருகே ,வீட்டில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
உசிலம்பட்டி அருகே ,வீட்டில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பேரையூர் அருகே, சட்ட விரோதமாக விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்திருந்த 74 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மூவரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், பேரையூர் காவல் சரக டி.எஸ்.பி. துர்காதேவி தலைமை யிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த கிளாங்குளத்தைச் சேர்ந்த முனியப்பன், வெள்ளைச்சாமியை, இடைமறித்து சோதனை செய்த போது, கஞ்சா வைத்திருந்தது கண்டறியப்பட்டு அவர்களிடம் நடத்திய விசாரணையில், மங்கல்ரேவைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடமிருந்து வாங்கி வந்ததாக கூறியுள்ளனர்.
இந்த தகவலின் அடிப்படையில், மங்கல்ரேவைச் சேர்ந்த வெங்கடேசன் வீட்டிற்கு சென்று போலீசார் நடத்திய சோதனையில், வீட்டில் பண்டல் பண்டலாக சுமார் 74 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இந்த கஞ்சா பதுக்கல் தொடர்பாக மங்கல்ரேவைச் சேர்ந்த வெங்கடேசன், கிளாங்குளத்தைச் சேர்ந்த முனியப்பன், வெள்ளைச்சாமி என, மூவரை கைது செய்து, பேரையூர் டிஎஸ்பி துர்காதேவி தலைமை யிலான போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.