கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை: போலீஸார் விசாரணை

மதுரையில் நடந்த பல்வேறு குற்றசம்பவங்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்;

Update: 2022-12-24 16:00 GMT

பைல் படம்

குடிப்பழக்கத்தை பெற்றோர் கண்டித்ததால்  கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை:

மதுரை திருமங்கலம் கிழவனேரியை சேர்ந்தவர் பிச்சைமணி மகன் ராம்குமார்(19.) . இவர் மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். தினமும் குடித்துவந்ததால் அவரை பெற்றோர் கண்டித்தனர் .இதனால் மணமுடைந்த மாணவர் ராம்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்து அவருடைய அப்பா பிச்சைமணி திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர் ராம்குமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜடாமுனி கோவில் தெருவில்  உள்ள ஜெயின் கோவில் காவலாளி மீது தாக்குதல் நடத்திய நபர் கைது:

மதுரை.ஆனையூர் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு தமிழ்நகரைச்சேர்ந்தவர் அம்மையப்பன்(70.). இவர் ஜடாமுணி கோவில் தெருவில் ஜெயின் கோவில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். அதேபகுதியை சேர்ந்தவர் நடராஜன் மகன் கண்ணன். இவர் காவலாளியுடன் தகராறு செய்து அவரை தாக்கினார். இந்த சம்பவம் குறித்து காவலாளி முதியவர் அம்மையப்பன் விளக்குத்தூண் போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய கண்ணனை கைது செய்தனர்.

எல்லிஸ் நகரில் கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை:

மதுரை, திருநகர் ஆர்.வி.பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி சுமதி( 25.).  இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைபிரிந்து தனியாக வசித்து வந்தார். இதனால் மணமடைந்த அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம்குறித்து அவருடைய அம்மா எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து சுமதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரை சட்டக்கல்லூரி வளாகத்துக்குள் பீகாரை சேர்ந்தவர் திடீர் மரணம்: போலீஸ் விசாரணை.

பீகார் மாநிலம் கதிகாரை சேர்ந்தவர் ரூபன்சிங்( 59.). இவர்  மதுரை  சட்டக் கல்லூரி வளாகத்துக்குள் இருந்தபோது திடீரென்று   மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர்  உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து இவரது உறவினர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த உறவினர் அஜய் சிங் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரூபன்சிங்கின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர் வயிற்று வலியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை:

மதுரை, முல்லை நகரை சேர்ந்தவர் பால்பாண்டி மகன் கார்த்திக்( 23.), இவர் தொடர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வலி குறைந்தபாடில்லை. இதனால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் விஷம்குடித்த நிலையில் தல்லாகுளம் ஆட்டோஸ்டேண்ட் அருகே சென்றபோது மயங்கி விழுந்தார் .அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி அழகு லட்சுமி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் கார்த்திக்கின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News