சோழவந்தான் ரயில்வே மேம்பால பணிகள்: மந்தகதியில் நடப்பதாக மக்கள் புகார்
திமுக அரசு பதவி ஏற்று ஓராண்டை கடந்தும் ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிவடையாததால் சிரமம் மட்டுமே தொடர்கதையாகிவிட்டது.
சோழவந்தான் ரயில்வே மேம்பால பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெறுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி வாடிப்பட்டி சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அரசு நிதி ஒதுக்கியது.இதில், ரயில் தண்டவாளத்தின் மேலாக வரும் ரயில்வே மேம்பாலத்தை மத்திய அரசு விரைவாக செய்து முடித்தது.
கடந்த சில ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெறும் பணியால் மக்கள் மிகவும் வேதனை கொள்ளவும், முகம் சுளிக்கவும் காரணமாய் உள்ளது.தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோழவந்தான் பாலத்திற்கு பின்பாக ஆரம்பிக்க பட்ட வேலைகள் விரைவாக முடிந்த நிலையில் சோழவந்தான் பாலம் மட்டும் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், சோழவந்தான் பொதுமக்கள் தமிழக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். புதிதாக பொறுப்பேற்ற அரசு ஒரு ஆண்டுக்கு மேலாகியும் , ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிவடையாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் மட்டுமே தொடர்கதையாகிவிட்டது.