சோழவந்தான் பேரூராட்சி பணியாளர் நியமனக் குழுவுக்கு பெண் கவுன்சிலர் தேர்வு
சோழவந்தான் பேரூராட்சி பணி நியமன குழு உறுப்பினராக, 1-வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்;
நியமன குழு உறுப்பினராக ஈஸ்வரி ஸ்டாலின்
சோழவந்தான் பேரூராட்சியில் பணி நியமன குழு உறுப்பினராக ஈஸ்வரி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி பணி நியமன குழு உறுப்பினராக, 1-வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
வெற்றி பெற்றவருக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன் பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், துணைத்தலைவர் லதா கண்ணன், வாழ்த்துக்களை தெரிவித்தனர். வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினராக, வழக்கறிஞர் சத்யபிரகாஷ் ,குருசாமி, சிவா முத்துச்செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கினார். தொடர்ந்து, சோழவந்தான் பேரூராட்சி மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.