அரசு பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை நாள் உறுதி மொழி ஏற்பு

உசிலம்பட்டி அரசு பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-06-13 10:41 GMT

 உசிலம்பட்டி அரசு பள்ளியில்  குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை அருகே, உசிலம்பட்டியில் அரசுப்பள்ளியில், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் ௧௨ம் தேதி தேசிய குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அரசு சார்பில் அரசு அலுவலகங்களில் குழந்தை தொழிலாளர் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள அரசுப்பள்ளியில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், உசிலம்பட்டி நகராட்சி சேர்மன் சகுந்தலா கட்டபொம்மன் தலைமை வகித்தார். தொழிலாளர் நலத்துறை அதிகாரி சிவசங்கரி, வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் மஞ்சு,வட்டார வளமைய பயிற்றுநர் ராஜா, பஜார் பள்ளி தலைமையாசிரியை வீரலட்சுமி,டிஜிட்டல் சகி மேலாளர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், குழந்தைத்தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.,தொழிலாளர் நலத்துறை சார்பில், கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பெண்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் கலந்து கொண்டனர்.,

இந்த நிகழ்ச்சியை, ரிலீப் ப்ராஜக்ட்ஸ் இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டி ஒருங்கிணைத்து நடத்தினார்.

Tags:    

Similar News