உசிலம்பட்டியில் மலேசியா கபாடி வீரர்களுக்கு பயிற்சி சான்றிதழ்..!
மலேசியாவில் இருந்து வந்து கபாடி பயிற்சி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டன.
உசிலம்பட்டி பிஎம்டி கல்லூரியில் மலேசியா கபடி வீரர்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கல்.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில், மலேசிய நாட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி குழு சார்பாக சுமார் 50க்கும் மேற்பட்ட மலேசியா நாட்டு கபடி வீரர்களுக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி நிர்வாகம் மற்றும் சதன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து சுமார் 20 நாட்கள் கபடி பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் நிறைவு நாளான இன்று பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி தாளாளர் வாலாந்தூர் பாண்டியன் தலைமை வகித்தார்.நிர்வாகக்குழு உறுப்பினர் திருமாவளவன் முன்னிலை வகித்தார். சுயநிதி பாடப்பிரிவு இணை முதல்வர் ஈஸ்வரன் வரவேற்றுப் பேசினார். பின்னர், கபடி வீரர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களை, கல்லூரித் தாளாளர் வாலாந்தூர் பாண்டியன் வழங்கினார்.
இதில் ,கபடி பயிற்சியாளர்கள் அலெக்ஸ் பாண்டியன், ஸ்டாலின், சபரிநாதன், நித்யானந்தன், அமமுக நிர்வாகி வீரமணி, தனியார்பள்ளித் தாளாளர் பிச்சைமாயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.