நன்றி மறந்த வேட்பாளர்.. மறக்காமல் நன்றி சொன்ன அமமுக கட்சி நிர்வாகிகள்

சோழவந்தான் பேரூராட்சியில் அமமுக சார்பில் வென்றவர் திமுகவின் இணைந்த நிலையில், மக்களுக்கு நன்றி கூறிய நிர்வாகிகள்

Update: 2022-02-25 09:15 GMT

சோழவந்தான் போரூராட்சியில் வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு அமமுகவினர் வீடுவீடாகச்சென்று நன்றி தெரிவித்தனர்.

சோழவந்தான் போரூராட்சியில்  வெற்றி பெறச்செய்த வாக்காளர்களை மறந்து அமமுக வேட்பாளர் திமுக இணைந்தபோதிலும்,   அமமுக நிர்வாகிகள் வார்டில்  வீடுவீடாகச்சென்று வெற்றி பெறச்செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வியப்பில் ஆழ்த்தினர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி. தேர்தலில் 9.வது வார்டில் அமமுக சார்பில் பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ் என்பவர் போட்டியிட்டு 512.ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். பின்னர். அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்காமல், உடனடியாக மாற்றுக் கட்சியில் இணைந்த கவுன்சிலர் சத்யபிரகாஷ்,   இனிமேல், ஒன்பதாவது வார்டு பகுதிக்குள் வரக்கூடாது என்று பரவலாக பேச்சு எழுந்தது.  இதனைக் கேள்விப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர். ராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அமமுகவினர் குக்கர் சின்னத்தில் வாக்களித்த 9..வது வார்டு. பகுதி பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஊர்வலமாக சென்றனர்.

தாங்கள் வாக்களித்து  வெற்றி பெற வைத்த வேட்பாளர் கட்சி மாறி திமுவில் சேர்ந்து ஏமாற்றி விட்டார் என்ற வேதனையில் வார்டு மக்கள் இருந்தனர். இந்நிலையில்,  அவர் போட்டியிட வாய்ப்பளித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தது வார்டு மக்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. முன்னதாக, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில், பொதுகுழு உறுப்பினர் ராமநாதன், வழக்கறிஞர் சந்திரசேகரன், மாவட்ட நிர்வாகிகள் முனைவர் பாலு, முள்ளை சக்தி, வீரமாரிபாண்டி. தேவி. ஜாக்குலின், சோபனா மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி ரஜினிபிரபு ஓன்றிய பேரூர் நிர்வாகிகள் சின்னமருது, மீனாட்சிசுந்தரம், மதன், பிடி.ஆர். பாண்டியன், முருகன், வெள்ளையங்கிரி, துரைராஜ், ஜெ.பேரவை சுந்தர், செல்லபாண்டி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News