விக்கிரமங்கலம் அருகே, மர்ம மிருகம் தாக்கி கன்று குட்டி உயிரிழப்பு
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே மர்ம விலங்கு தாக்கியதில் கொட்டகையில் கட்டியிருந்த கன்றுக்குட்டி உயிரிழந்த சோகம்;
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நடு முதலைக்குளம் கிராமத்தில் உள்ள கண்மாய்கரை அருகில் குமார் என்பவர் தோட்டத்தில் ஆடு ,மாடு வளர்த்து வருகிறார். இந்நிலையில், அவரது கொட்டகையில் இரவு மாடுகளை கட்டி விட்டு சென்ற நிலையில் இன்று காலை சென்று பார்த்தபோது, கன்று குட்டி ஒன்று அடையாளம் தெரியாத விலங்கு தாக்கியதில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் .
இது குறித்து, விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவமறிந்த காவல்துறையினர் மற்றும் மருத்துவர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்த கன்று குட்டிக்கு அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். மேலும் கன்றுக்குட்டியை தாக்கிய மர்ம விலங்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்