விக்கிரமங்கலம் அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தின விழா கொண்டாட்டம்

விக்கிரமங்கலம் அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.;

Update: 2024-01-04 09:07 GMT

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் விக்கிரமங்கலம் அருகே பானா மூப்பம்பட்டி கிராமத்தில் , சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

வெள்ளைக்காரர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி காலனி ஆதிக்கம்  செலுத்தி வந்த நிலையில் தென் தமிழகத்தில் பாளையக்காரராக ஆட்சி செய்து வந்த வீர பாண்டிய கட்டபொம்மன் உரிமைக்குரல் எழுப்பினார். கப்பம் கட்ட மறுத்ததோடு ஆங்கிலேய ராணுவத்திற்கு எதிராக வாள் ஏந்தினார். இறுதியில் எட்டப்பர்கள் காட்டி கொடுக்கு தூக்கிலிடப்பட்டார்.

அத்தகைய வீரமிக்க வீரபாண்டிய கட்ட பொம்மன் பிறந்த நாள் விழாவிற்கு, பானாமூப்பம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார் .இதில், ராஜா கம்பளத்தார் சங்க பொருளாளர் முருகன், செயலாளர் அழகர்சாமி மற்றும் நிர்வாகிகள் ஆர்யா தீனா அர்ஜுனன், பிரசாத் பிரேம், வினோத் தினேஷ், பிரேம் ஆகியோர் கலந்து கொண்டனர் .

விழாவை முன்னிட்டு, வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் ,அங்கிருந்த மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கிராம மந்தையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பானாமூப்பம்பட்டி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களிலிருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News