அலங்காநல்லூர் அருகே கல்லணை கிராமத்தில் அம்மன் பூப்பல்லக்கில் பவனி
அலங்காநல்லூர் அருகே கல்லணை கிராமத்தில் அம்மன் பூப்பல்லக்கில் பவனி வந்தார்.;
அலங்காநல்லூர் அருகே கல்லணை கிராமத்தில் அம்மன் பல்லக்கில் பவனி வந்தார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளது கல்லணை கிராமம். ஆண்டுதோறும் இக் கிராமத்தில் பங்குனி பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். இடையில் பல ஆண்டுகள், ஏதோ ஓரு காரணத்துக்காக, விழா நடைபெறவில்லை.
கடந்த 18 ஆண்டுகளுக்கு பின், பங்குனி பொங்கல் விழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் பாலமரத்தம்மன் புறப்பாடாகி,பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதை கிராம மக்கள் கண்டு தரிசித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.