மதுரையில் உலக நன்மைக்காக சுட்டெரிக்கும் நெருப்பில் பரத்வாஜ் சுவாமிகள் தவம்
மதுரையில் உலக நலன் வேண்டி பரத்வாஜ் ஸ்வாமிகள் தீ ஜுவாலைக்கு நடுவே ஒன்றரை மணி நேரம் பஞ்சாக்னி தவம் நடத்தினார்;
மதுரையில் உலக நலன் வேண்டி பரத்வாஜ் ஸ்வாமிகள் தீ ஜுவாலைக்கு நடுவே ஒன்றரை மணி நேரம் பஞ்சாக்னி தவம் நடத்தினார்.
உலக நலன் மற்றும் ஆன்மீக எழுச்சி வேண்டியும் உலகில் இயற்கை சீற்றங்கள் நிகழாமல் இருக்கவும் சென்னை புவனேஸ்வரி பீடம் ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள் அக்னி ஜுவாலைக்கு நடுவே ஒன்றரை மணிநேரம் தவமிருந்தது பக்தர்களுக்கு இடையே நெகிழ்ச்சியை உண்டாக்கியது
சென்னை யோகமாயா புவனேஸ்வரி பீடம் பரமஹம்ச ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள் மதுரை பழங்கா நத்தத்தில் இன்று பஞ்ச அக்னியில் தவமிருந்து மகா வராகியை தியானம் செய்தார்.மௌன நிலையில் யாரிடமும் பேசாமல் நேற்று பௌர்ணமியில் தொடங்கி எல்லா தெய்வங்களுக்கும் உகந்த நாளான பங்குனி உத்திரம் தினத்தன்று இன்று மதுரை மீனாக்ஷி அம்மனின் அருள் ஆட்சி பீடமான மதுரை பழங்காநத்தம் பகுதியில் வேத காலத்தில் ரிஷிகள் முனிவர்கள் செய்தது போல எந்த ஆரவாரமின்றி ஒரு நிலைப்பாட்டோடு தீ நாக்குகள் வளைந்து வளைந்து வந்த போதும் நெக்குருக தேச மக்கள் நலன் பெற வேண்டியும் ஆன்மீக எழுச்சி வளரவும் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும் ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள் அக்னி ஜுவாலை கிடையே தவமிருந்தது பக்தர்களுக்கு இடையே ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் உண்டாக்கியது
பரத்வாஜ் ஸ்வாமிகள் மேலும் கூறியதாவது : ஒவ்வொரு வரும் உயிர்களிடத்தில் செடிகொடிகள் பிராணிகள் இடத்தில் அன்பு செலுத்த வேண்டும். மனிதகுலம் அரக்க குணத்தை விட்டு இரக்க குணத்தை கடைபிடிக்க வேண்டும்.அக ஒழுக்கத்தையும் புற ஒழுக்கத்தையும் ஆண் பெண் இருபாலரும் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.எவரிடத்திலும் அன்பு காட்டுவதோடு மட்டுமன்றி மனசாட்சிக்கு பயந்து ஒவ்வொருசெயலையும் செய்யவேண்டும் என்று கூறினார்
இன்று காலை 11 மணிக்கு தொடங்கி ஒன்றரை மணிநேரம் பஞ்சாக்னி ஜெபத்தை ஸ்வாமிகள் செய்ததைப் பார்த்து பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.பரத்வாஜ் சுவாமிகள் அக்னியையும் சூரியனையும் உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்து வேள்வியை நிறைவு செய்தார்.