உசிலம்பட்டி அருகே தரமற்ற சாலை! நடவடிக்கை எடுக்கப்படுமா?

உசிலம்பட்டி அருகே தரமற்ற சாலை! நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2024-04-26 11:45 GMT

உசிலம்பட்டியில், தரமற்ற சாலையா?

உசிலம்பட்டியில், தரமற்ற சாலைகளா?

மதுரை:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி வார்டு பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு போடப்பட்ட தரமற்ற சிமெண்ட் சாலையால் வெட்டிப்பு ஏற்பட்டுள்ளது.

தரமான சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டு மீனம்மாள் 1 வது தெருவில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளது.,

இந்நிலையில் ,இந்த சிமெண்ட் சாலையில் ஆங்காங்கே வெட்டிப்புகள் ஏற்பட்டு சல்லிகற்கள் வெளியில் தெரிகின்றன. இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர்.

மேலும், கனரக வாகனங்கள் சென்றாலே சாலையில் பள்ளங்கள் ஏற்படுகிறது. இதனை உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுத்து சிமெண்ட் சாலையில் ஆங்காங்கே வெட்டிப்புகள் ஏற்பட்டு சல்லிகற்கள் வெளியில் தெரிகிறது.,

இதனை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சரிசெய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில், பல இடங்களில் சாலைகள் அவசரமாக அமைக்கப்படுவது சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மதுரை மாநகராட்சி பகுதியிலும், சாலைகள் அவசரமாக ஒப்பந்ததாரர்கள் போடுவதாக பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள், புகார் மீது நடவடிக்கை எடுத்தால், தான் சாலைகள் தரமாக போடப்படும்.

Tags:    

Similar News