உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் சாலை மறியல்
விக்கிரமங்கலத்தில் ஐயப்ப பக்தர்கள் வழிபாட் டுக்காக சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது;
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலத்தில் ஐயப்ப பக்தர்கள் உட்பட கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே ஐயப்ப பக்தர்களால் ஐயப்பன் கோவில் கட்டப்பட்டு வருடம் தோறும் பஜனைகள் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர் விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து தினசரி இந்த கோவிலில் பஜனை செய்து பூஜைகள் செய்து வருகின்றனர்.
கிராமத்தில் ஒரு சிலருடைய புகாரின் அடிப்படையில் வருவாய்த்துறையினர் இந்த கோவில் கட்டி இருந்த இடத்தை காலி செய்ய சொல்லி விளம்பர போடு உசிலம்பட்டி கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து இன்று காலை விக்கிரமங்கலம் மதுரை செல்லும் சந்திப்பு ரோட்டில் ஐயப்ப பக்தர்கள் குடும்பத்துடன் பொதுமக்களும் சேர்ந்து 200-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.
இதில் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கவிதா ராஜா, விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வி செல்வம் ஐயப்ப பக்த குருநாதர் உட்பட 200 பேர் இந்த மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் கோட்டாட்சியர் மட்டும் வட்டாட்சியரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்
தகவல் அறிந்து விக்கிரமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். ஐயப்ப பக்தர்கள் வழிபாட்டுக்காக சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரபரப்பாக காணப்பட்டது.