உசிலம்பட்டியில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து அமமுக ஆர்ப்பாட்டம்..!

மதுரை, உசிலம்பட்டியில் மின்சார கட்டணம் உயர்வைக்கண்டித்து அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2024-08-17 10:19 GMT

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் மின்சார கட்டண உயர்வைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம்

தமிழக அரசைக் கண்டித்து, அமமுக ஆர்ப்பாட்டம்:

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம்,உசிலம்பட்டியில், மின் கட்டண உயர்வைக் கண்டித்து அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முருகன்கோவில் முன்பு மின் கட்டண உயர்வு, அனைத்து வரிகளின் உயர்வை கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ,கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அமமுக மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் டேவிட் அண்ணாத்துரை தலைமையில்,ஆர்ப்பாட்டத்தில் ,மாவட்ட செயலாளர் டேவிட் அண்ணாதுரை பேசியது:

தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் ,சிறுககுறு  தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் ,மேலும் மின் கட்டண உயர்வால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் ,தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என, பேசினார்.

உசிலம்பட்டி நகர ஒன்றிய மற்றும் சேடபட்டி, செல்லம்பட்டி ஒன்றிய அமமுக நிர்வாகிகள் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர் 

தமிழகத்தில் மின் கட்டண உயர்வைக்கண்டித்து அதிமுக தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்தியது. தற்போது மதுரையில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து அமமுக ஆர்ப்பாட்டம் செய்துள்ளது. 

Tags:    

Similar News