அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி முன்னாள் எம்எல்ஏ நினைவு நாளில் அன்னதானம்

முன்னாள் எம்எல்ஏ சந்தானத்தின் நினைவு நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.;

Update: 2021-11-24 07:00 GMT
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி முன்னாள் எம்எல்ஏ நினைவு நாளில் அன்னதானம்

சோழவந்தானில் பார்வர்டு பிளாக் முன்னாள் எம்.எல்.ஏ. நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற அன்னதானம்

  • whatsapp icon

மதுரை மாவட்டம், சோழவந்தான் முன்னாள் எம்எல்ஏ சந்தானத்தின்  மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அகில இந்தியபார்வர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ சந்தானம், மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் ஆணைக்கிணங்க, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கழக அமைப்புச் செயலாளர், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன், விக்கிரமங்கலம் அருகே மேல பெருமாள்பட்டியில் உள்ள சந்தானம், சமாதியில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், அங்கு நடைபெற்ற அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News