உசிலம்பட்டி அருகே 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில் கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி அருகே 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அய்யனார், பேச்சியம்மன், சின்னச்சாமி கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-09-09 07:13 GMT

உசிலம்பட்டி அருகே 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அய்யனார், பேச்சியம்மன், சின்னச்சாமி கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

உசிலம்பட்டி அருகே 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அய்யனார், பேச்சியம்மன், சின்னச்சாமி கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, நாட்டாமங்கலம் கிராமத்தின் கண்மாய் கரையில் காவல் தெய்வ கோவிலாக அமைந்துள்ளது. அய்யனார், பேச்சியம்மன், சின்னச்சாமி கோவில்.

சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அய்யனர் சுவாமிக்கு 51 அடியில் ராஜ கோபுரம், பேச்சியம்மன் மற்றும் சின்னசாமிக்கு 21 அடியில் கோபுரங்கள் எழுப்பப்பட்டு 15 ஆண்டுகளுக்கு பின் இன்று கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக, கடந்த 6 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கி மூன்று கால யாக பூஜைகள் செய்து வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் இன்று கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து, அய்யனார் சுவாமி, பேச்சியம்மன் மற்றும் சின்னச்சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இந்த கும்பாபிஷேக விழாவில், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் உள்ளிட்ட மதுரை, தேனி, திண்டுக்கல் என பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக தரிசனம் மற்றும் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News