வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது; பாேலீசார் அதிரடி
மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டையில் வெளிமாநில மதுபாட்டில்களை கடத்தி விற்பனை செய்த 2 பேரை பாேலீசார் கைது செய்தனர்.;
மதுரை, நாகமலை புதுக்கோட்டை அருகிலுள்ள பல்கலை நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (48), கரடிக்கல் பகுதியை சேர்ந்த சுரேஷ்(29) இவர்கள் இருவரும், கப்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணி புரிந்து வருகின்றனர்.
இவர்கள், மதுரையில் இருந்து பெங்களூருக்கு சென்று விட்டு, மீண்டும் மதுரை திரும்பும் போது, பெங்களூருவில் இருந்து சட்டவிரோதமாக மதுபாட்டில்களை வாங்கி வந்து நாகமலை புதுக்கோட்டை பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளனர்.
இது குறித்து, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மதுபாட்டில்கள் கடத்தி வந்த லாரியை மடக்கி பிடித்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் அவர்களிடமிருந்து 292 மது பாட்டில்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.