தமிழ் சினிமா உயிர்ப்போடு இருப்பதற்கு காரணமானவர் டி.ஆர்.மகாலிங்கம்
எல்லாத் திசைகளிலும் தன் குரல் ஒலிக்காத இடங்களே இல்லை என்ற நிலையைத் தன் வெண்கலக் குரலால் சாத்தியமாக்கியிருந்த மகாலிங்கம்,
தமிழ் சினிமா உயிர்ப்போடு இருப்பதற்கும் காரணமான டி.ஆர்.மகாலிங்கம் காலமான தினமின்று
பாடக நடிகர் பட்டியலில் பெரும் பிரபலமாக இருந்த கிட்டப்பா மறைவுக்குப் பின்னர், கலைத்துறையும் காலமும் சேர்த்து கையெடுத்துக்கொண்டு கானக் கலைமகன்தான் டி.ஆர்.மகாலிங்கம்.
தமிழ் சினிமாவில் இசைத்தமிழ் உயிரோடு இருந்ததற்கும் உயிர்ப்போடு இருப்பதற்கும் காரணமான பாடக நடிகர். நாடகப் பாடகர்களாக இருந்தவர்கள் பாடக நடிகர்களாக மாறி திரைப்பிரவேசம் செய்து கொண்டிருந்த காலம் அது. அந்த சமயத்தில் பாடக நடிகர் பட்டியலில் பெரும் பிரபலமாக இருந்த கிட்டப்பா மறைவுக்குப் பின்னர், கலைத்துறையும் காலமும் சேர்த்து கையெடுத்துக்கொண்டு கானக் கலைமகன்தான் டி.ஆர்.மகாலிங்கம்.
இன்றைக்கும் "இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை" என்ற நான்கு சொற்களை சொல்லி முடிப்பதற்குள் ஒரு முகம் நினைவுக்கு வருமென்றால் அது டி.ஆர்.மகாலிங்கத்தின் முகமாகவே இருக்க முடியும். இதுதான் அவரது வெற்றியும் கூட.
1924 ஜூன் 16ஆம் தேதி மதுரை சோழவந்தானை அடுத்த தென்கரையில் பிறந்த டி.ஆர்.மகாலிங்கத்துக்கு சிறுவயது முதலே பள்ளிப்படிபபை விட பாட்டில்தான் நாட்டம் அதிகம். விளைவு பள்ளிப்படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு பாட்டுக்கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.
சிறுவயது முதலே நாடகங்களில் நடித்த இவருக்கு முதல்பட வாய்ப்பு வந்தபோது வயது 12. தொடர்ந்து பாடல்களுல் கலக்கும் திரைநாயகனாக இருந்து வந்தபோதிலும் கால மாற்றம் வசனங்களுக்கு முக்கியத்துவமுள்ள படங்களை விரும்பியது. இதன் விளைவாக நாயகனாக நாடகங்களிலும், பாடகராக சினிமாவிலும் வலம் வரத் தொடங்கினார்.
பாடகர், நடிகர் என்பதைக் கடந்து தயாரிப்பாளராகவும் மாறிய மகாலிங்கம், "மோகனசுந்தரம், சின்னதுரை, மச்ச ரேகை, தெருப்பாடகன், விளையாட்டு பொம்மை" ஆகிய படங்களையும் தயாரித்து நடித்தார்.
தமிழகக்த்தின் எல்லாத் திசைகளிலும் தன் குரல் ஒலிக்காத இடங்களே இல்லை என்ற நிலையைத் தன் தனித்துவமிக்க வெண்கலக் குரலால் சாத்தியமாக்கியிருந்த மகாலிங்கம், தன் கடைசி வாழ்நாள் வரையிலும் கச்சேரி பாடிக்கொண்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. தேமதுரத் தமிழோசையில் திந்தரிகிட தீர்க்கத்தை ஒரு சேர உணரவைத்த டி.ஆர்மகாலிங்கம், இன்னுயிர் விடுத்து இணையில்லா இசையை மட்டும் இந்த உலகுக்கு விட்டுச் என்ற தினம் இன்று .