மதுரையில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது: அமைச்சர் மூர்த்தி.
மதுரையில் மக்கள் ஒத்துழைப்போடு கொரோனா தாக்கம் குறைந்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.;
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூர் காசநோய் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய 200 படுக்கை கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளளிடம் பேசுகையில், ராஜாஜி மருத்துவமனையில் புதிதாக 250 ஆக்சிஜன் படுக்கைகள், தோப்பூரில் 200 படுக்கை கொண்ட மையத்தை திறந்து வைத்துள்ளோம். மக்கள் ஒத்துழைப்போடு கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. மூன்றாவது அலைக்கான முன்னேற்பாடுகளை இப்போதே செய்திருக்கிறோம். தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 23 ஆயிரம் பேர் ஆக குறைந்துள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை கொண்டு வந்து ஆக்சிஜன் பற்றாக்குறை நீங்கியுள்ளது. இன்று தேவைக்கு அதிகமாக இருப்பு உள்ளது. தற்போது 450 படுக்கைகள்முன்னெச்சரிக்கையாக ஏற்படுத்தி உள்ளனர். நோய்த் தொற்று குறைந்துள்ளது. தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது, என தெரிவித்துள்ளார்.